பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 33

தன்னை நேர்மைப்படுத்திக் கொள்கின்ற வாய்ப்பையும் வசதியையும் வழங்குகின்ற விளை யாட்டில் தவறு செய்பவர்கள், வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்று யூகித்துக் கொள்வது மிக சுலபமல்லவா!

எத்தனை காலம் ஒருவன் வாழ்ந்தான் என்று யாரும் அறிந்து கொண்டு ஒருவனை பாராட்ட ாட்டார்கள். அது ஆண்டவன் எழுதிய எழுத்துக் குரியது. ஆனால், அவன் வாழ்ந்த காலம் வரை எப்படி வாழ்ந்தான் என்பதில்தான் பெருமையும் புகழும் கிடைக்கும். அதைப் போலவே, ஒருவன் எத்தனை விளையாட்டுக்களில் சேர்ந்து கொண்டு ஆடுகிருன் என்பதில் அல்ல அவனுக்குப் பெருமை. அவன் எப்படி ஆடுகின்ருன் என்பதில் தான் அவன் புகழ் பெறுகிருன்.

பத்தாப்பு தீபம்

பிரகாசமாக எரியும் விளக்கையே அனைவரும் விரும்புகின்ருர்கள் . ஏற்றுக் கொள்கின்ருர்கள். அதே போல் திறமையுடனும் தகுதியுடினும் பிரகாசிக்கின்ற ஆட்டக்காரையே விளையாட்டுலகம் விரும்பி வரவேற்று வாழ்த்தி ஏற்றுக் கொள்கிறது. நின்று எரியும் தீபமாகத் திகழ வேண்டுமே தவிர, படபடக்கும் மத்தப்பாக எரிந்து கருகிப் போய் விடக் கூடாது.

தற்கொலை ஆட்டம்

தோற்றுப் போவோம் என்று பயந்து கொண்டு அல்லது எதிர்த்தாடுபவர்கள் வல்லவர்களாக