பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

விளையாட்டுச் சிந்தனைகள்


காலத்தில் உட்கார்ந்து உண்ண முடியும். அதே நிலை தான் விளையாட்டிலும்.

சாதாரண நாட்களில் சகல திறன்களையும் கற்றுத் தேர்ந்து வைத்திருந்தால் தானே, போட்டி நாட்களில் சிறப்பாக ஆட முடியும். ஒன்றுமே தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டு, மக்களுக்கு மத்தியில் சண்டப்பிரசண்டன் போலத் தோன்ற வேண்டும் என்ருல் முடியுமா? அது காலிரண்டும் இல்லாதவன் பரத நாட்டியம் ஆட புறப்பட்டதைப் போலத்தான் இருக்கும்!

கல்லும் சொல்லும்

எதிர்த்து ஆடும் ஆட்டக்காரர்களை எப்படி யாவது மடக்கி, அவர்களை மாட்டிவிட்டு, அவஸ்தை பட வைத்து விட வேண்டும் என்று ஆட்டத்திற்கு முன்னரே திட்டம் தீட்டிக் கொண்டு வருகிறவர் களும் இருக்கத்தான் இருக்கிருர்கள். பழி வாங்கும் தன்மையென்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படி பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டு ஆனந்தப்படுபவர்களும் உண்டு. அவர்கள் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். விளையாட்டு என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல. விபத்து என்பது இருவருக்கும் சொந்தமானது தான்.

படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் வீழ்வான். கல்லைப் புரட்டுகிறவன் மேலேயே அந்தக் கல் திரும்பவிழும் என்று கூறுகிறது பைபிள்.

இதை மறந்தார்க்கு வருவது துன்பமே தவிர இன்பமல்ல! \