பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 37.

நெருஞ்சிலும் திராட்சையும்

முறையற்ற வழிகளிலும் முரட்டுத்தனமாகவும் விளையாடுகின்றவர்கள். விளையாட்டின் இனிய நோக்கத்தையே வீழ்த்தியவர்கள் ஆகின்ருர்கள். அநியாயமாக அப்படி ஆடி விட்டு, அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுகின்ருர்கள். அப்படி பாராட்டவில்லையே என்று ஆதங்கமும் படுகின்ருர்கள். அவர்கள் முட் செடிகளில் அத்திப் பழத்தையும், நெரிஞ்சிச் செடிகளில் திராட்சைப் பழத்தையும் பறிக்கப் போகின்ற பரம புத்திசாலி கள் ஆவார்கள்.

பன்னிர் மீன்

மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்ய நொய்யக் குத்திலுைம், அவன் மூடத்தனம் அவனை விட்டு நீங்காது என்று வேத வாக்கியம் கூறுகிறது. சோம்பேறியையும், கற்றுக் கொள்ள வேண்டும். என்று விரும்பாதவனையும் கூப்பிட்டு என்னதான் கத்தினுலும், கற்றுத் தந்தாலும் அவர்கள் பன்னீரில் கழுவிய மீனைப் போல் தான் இருப்பார் கள். பன்னீரில் கழுவிலுைம், மீனின் நாற்றம் போய் விடுமோ!

கலங்கரை விளக்கு

விளையாட்டு-மனித குலத்தின் வழிகாட்டி! இன்ப உலகைக் காட்ட வரும் விடிவெள்ளி! அமைதியைக் காட்டவரும் அழகு மணிக் கலங்கரை