பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38
விளையாட்டுச் சிந்தனைகள்
 


விளக்கு! அறிவினை விரிவு படுத்தும் ஆசான்! தளராத நற்பண்புகளைச் சாலப் பரிந்துாட்டும் தாய்!

நல்ல நண்பன்

சகோதர பாசத்தையும், சமத்துவத்தையும், சகல விதமான வாய்ப்பையும், தன் மான உரிமை யையும் அளிக்கின்ற விளையாட்டுக்கள் எல்லாம், நம்மை காக்க வந்த நண்பர்கள்.

விளையாட்டை விரும்பியவன், உண்மையிலே விளையாட்டைப் பின்பற்றியவன் என்றும் வீழ்ந்த தில்லை வாழ்ந்ததாகவே சான்றுகள் உள்ளன.

சக்தி

மனித இனத்தை மாண்புடன் காக்கும் சக்தி, விளையாட்டுகளுக்குத் தான் உண்டு. மனிதர்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்யவும், மனதாபிமானத் துடன் உலவச் செய்யவும், மட்டற்ற நெஞ்சுரத்தை நிரந்தரமாகத் தரவும், வாழ்க்கையை பரிபூரண மாக விளங்க வைக்கவும் விளையாட்டுக்களால்

மட்டுந்தான் முடியும்.

இன்ப நிலம்

இதயத்தில் இன்பத்தை விளக்கின்ற நிலமாக உணர்ச்சிகளின் உற்சாகத்தை ஊட்டுகின்ற களமாக, வாழ்க்கையில் வானமுத விருந்தளிக்கும் தளமாக விளையாட்டுக்கள் விளங்கி வருகின்றன.