பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40
விளையாட்டுச் சிந்தனைகள்
 


உடற்பயிற்சி

உடலைத் திறமையாகவும், தரமாகவும், நிறமா கவும், நலமாகவும், நாள் முழுதும் வளமாகவும் வைத்துக் கொள்ள மேற்கொள்ளுகின்ற அரிய முயற்சியைத் தான் உடற்பயிற்சி என்கிருேம்.

முடியாது உடற்பயிற்சி

காக்கையின் கூட்டில் தனதுமுட்டையையிட்டு, அதில் உள்ள முட்டையை உடைத்துக் குடித்து விட்டுத் தன் இனத்தை விருத்தி செய்து கொள் கின்ற வஞ்சகக்குயில்களைப் போல, பிறர் உழைப் பால் வாழத் த டிக்கும் சோம்பேறித் தேனிக்களைப் போல; அடுத்தவர் உடலில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சி வாழும் உண்ணிகளைப் போல், அட்டைகளைப்போல சோம்பேறிகளாய் வாழ் கின்றவர்களால் நிச்சயம் உடற்பயிற்சி செய்ய

முடியாது

என்ன சுகம்

நோயிலே வீழ்ந்து, பாயிலே புரண்டு, வாய் புலம்பி, வழிகலங்கி, மனம் வதங்கிக் கிடக்கும் ஒருவளுல் வாழ்க்கையில் என்ன சுகம் எய்திட முடியும்? அவனே அவனுக்குப் பயனில்லை என்கிற பொழுது, அவனுல் பிறருக்கு என்ன தான் பயன் கிடைத்து விடும். தன்னை நோயாளி என்று கூறிக் கொள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். வைத்தியரிடம் செல்கிறேன் என்று பெருமையாகப் பேசுகின்ற ്, IT ബ) LDIT ,) அல்லவா இப்போது

இருக்கிறது?