பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

விளையாட்டுச் சிந்தனைகள்


விளையாட்டும் நோக்கமும்

விளையாட்டு என்ருல் அதற்கு நோக்கம் உண்டு. அந்தக் குறிக்கோளை அடைய கால அளவும் உண்டு. நீதி நியாய வழிகளும் உண்டு. வழுவினல் தண்டனை யும் உண்டு. எதிர்பார்க்கும் லட்சியத்தை அடைய இணைந்து செயல்படும் நாணயமும், நா. நயமும் நல்ல பாச உணர்வும் விளையாட்டிலே உண்டு

ஆராய்ச்சிக் கூடம்

வாழ்க்கையின் சோதனைக் கூடம், வாழ்வின் ஆராய்ச்சிக் கூடம் விளையாட்டு என்ருல் அது உண்மையே தவிர மிகையல்ல.

விதிப்புழுதியில் வெண்ணெய்

வயதாக ஆகத்தான் அறிவும் அனுபவமும் ஒருவருக்குப் பெருகி வருகின்றது. வளருகின்றது. பரந்த அறிவும் பண்பட்ட அனுபவமும் இருந்தும், நன்ருக வாழ்கிற வழியும் புரிந்தும், உடல் நலம் ஒருவருக்குப் பழுதுபட்டுப் போனல், அதனல் யாருக்கும் பயன் கிடைக்காதே! வீதிப் புழுதியிலே வெண்ணெய் விழுந்து விட்டால் அள்ள முடியுமா? கொள்ளத்தான் முடியுமா? அத்தனையும் பாழ் தானே? அதை உணர வேண்டாமா நாம்?

ஆடுகளத்தின் மகிமை

அழகு சிரிக்குமிடம், அறிவு சுரக்குமிடம், அனுபவம் பிறக்குமிடம், ஆனந்தம் பெருகுமிடம். அற்புதம் விளையும் இடம், என்று ஆடுகளத்தின்