பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44
விளையாட்டுச் சிந்தனைகள்
 


பணத்தைப் பெட்டியிலே பூட்டி வைத்துக் கொண்டு, தினந்தினம் தனியாக எண்ணிப் பார்த்து கட்டிக் காத்து மகிழ்கின்ருனே கஞ்சன், அவனைப் போல உடலைப் பாதுகாக்க வேண்டும்.

பிள்ளையே இல்லாதவள் ஒருத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு தான் பெற்றெடுத்தக் குழந்தையைக் கொஞ்சுவது போல உடலைக் கொஞ்ச வேண்டும்.

நன்றியுள்ள வேலைக்காரன் தன் முதலாளி யிடம் காட்டுகின்ற விசுவாசத்தைப் போல, தன் உடலிடம் ஒவ்வொருவரும் நேசம் காட்ட வேண்டும்.

ஒத்திகை மன்றம்

ஒத்திகையில்லாத நடிப்பும், பண்படாத பயிற்சியும் சிறந்த நடிப்பையோ, சீரான வெற்றி யையோ அளிக்காது. அவ்வாறு அளிப்பது போன்று அது தோன்றிலுைம், சீராக அமையாது.

ஆகவே, உலக மேடையில் உயர்ந்த வாழ் வெ. னும் உன்னத நடிப்பை நடித்துக் காட்டுவதற்கு உபயோகமுள்ள ஒரு ஒத்திகை மன்றம், பயிற்சிக் கூடம் ஆடுகளம். அதாவது விளையாடும் மைதானமே!

இயற்கையின் இனிய சீதனம்!

இயற்கை அன்னே தன் மக்களுக்கு விலைமதிக்க முடியாத சீதனமாக வழங்கித் தருவது உயிர்க் காற்றைத்தான். (பிராண வாயு). அதை அதிகம்

பெறுகின்றவர்களே ஆரோக்கியமாகவும் ஆனந்த