பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

விளையாட்டுச் சிந்தனைகள்


செய்ய வேண்டும் என்ரு கேட்கிறது? இல்லையே! ‘என்னை நன்ருக நலிந்து போகாமல் வைத்துக் கொள்ளுங்களேன்' என்று தான் கேட்கிறது.

அதற்கு உற்சாகம் தரத் தக்க முறையில் சில பயிற்சிகளைச் செய்தால், அந்தப் பயிற்சியாலேயே திடமாகச் செழித்துக் கொள்ளும். அதை உற்சாகப் படுத்தும் செயல்களை செய்தால் நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்! உடலை வைத்துத் தானே இந்த உலக வாழ்க்கை இருக்கிறது.

மூன்று வகை மனிதர்கள்

உருவத்தால் மனிதன். உணர்வால் அலைக் கழிக்கப்படும் மனிதன். அறிவார்ந்த மனிதன் என்று மனிதர்களை மூன்று வகையாகப் பிரிப்பார் கள் அறிஞர்கள். அவர்களுக்கும் மேலாக ஒரு மனிதன் இருக்கிருன். அவன்தான் பரிபூரண மனிதன். அறிவையும் உடலையும் ஒரு சேர அருமை யாக வளர்த்துக் கொண்டு வாழ்பவன்.

அதாவது வயப்படுகின்ற வலிவான உடலை யும், தெளிவான கட்டுப்பாடுடன் இயங்குகின்ற மனதையும் உடையவகை விளங்குபவனையே பரி பூரணமான மனிதன் என்கிருேம்.

தேகம் ஒரு வாகனம்!

நமது தேகமானது, இந்த சம்சார சாகரத்தை சாமர்த்தியமாகக் கடக்க உதவுகின்ற போர்க் கப்பல். நமது இலட்சியப் பயணத்தினை அடைவதற்