பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

விளையாட்டுச் சிந்தனைகள்


உண்மையான உழைப்பின் மூலமே வருகிறது. உழைப்பில் வாரா உறுதியும் உளவோ!

விளையாட்டும் ஓர் இசைதான்

மொழி, இனம், கலாசாரம், ஏழை பணக் காரன் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி, இளையோர் முதியோர் என்ற பாகுபாடின்றி, அஃறிணை உயர் திணை என்ற வேற்றுமையின்றி, எல்லோரையும் கவர்கின்ற ஆற்றல் உள்ளது. இசை என்ருல், எல்லோரையும் கவர்கின்ற ஆற்றலில் விளையாட்டு மட்டும் எந்த அளவு குறைந்து போயிருக்கிறது என்று நீங்கள் கூறுங்கள் பார்ப்போம்! அனைவரை யும் மயக்குகின்ற விளையாட்டும் ஒர் இசைதான்.

வழிகாட்டும் விளையாட்டு

ஒரு குழுவில் 6 ஆட்டிக்காரர்கள், 9 அல்லது 11 ஆட்டக்காரர்கள் இருந்து விளையாடுகின்ருர்கள். ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை விளையாட்டுக்கு ஏற்ப வேறுபடும். ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒற்றுமையாக, சோம்பலின்றி, மனவேறுபாடு இன்றி, உற்சாகமாக ஒத்துழைத்து ஆடினல்தான் குழு வெற்றி பெறும். அதில் ஒருவர் கருத்து வேறுபாட்டுடன் ஆடினலும் ஒற்றுமை குலைந்துவிடும். வெற்றிக் கனவும் கலந்து போய் விடும்.

ஒவ்வொரு குடிமகனும் உண்மையாக உழைத் தால், எந்த ஒரு நாடும் ஜனத்தொகையில் அதிக