பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 விளையாட்டுச் சிந்தனேக வி

உறுப்புக்கள் செழிக்கும். வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.

ஆண்மையுள்ள ஜீவன்

சிரிக்கத் தெரிந்தவனுக, சிந்திக்க முடிந்தவனுக பேசப் புரிந்தவகை, பேராண்மை மிக்கவனுகவும் மனிதன் இருக்கிருன். அத்துடன் மட்டுமல்ல. அவன் நிமிர்ந்து நிற்கக் கூடிய ஒர் அறிவுள்ள, ஆண்மையுள்ள ஜீவன்.

இதை மறந்து, மண் பார்த்து நடப்பது போல் குனிந்து முதுகை வளைத்து நடப்பது நன்ருகவா இருக்கிறது? அதையும் மீறி வளைந்த முதுகுக்குச் சொந்தக்காரர்களாகி விடுகின்ருர்களே! என்ன செய்வது? புண்ணியம் செய்து பெற்ற உடலைக் கண்ணியக் குறைவாக நடத்துகின்ருர்களே!

மைேதிடம்

எவ்வளவு சாப்பிட்டிால் வயிறு நிறையும் என்ற அளவு, ஒவ்வொருவருக்கும் தெரியும். வயிற்றுக்குச் சாப்பிடுபவர். வயிறு நிறைய சாப்பிடு பவர். வயிறு முட்ட சாப்பிடுபவர் என்ற சாப்பிடும் வகையினே ஆட்களைக் கொண்டு பிரிக்கலாம். ஆளுல் அனுபவ பூர்வமான முறையில் அதே நேரத்தில் விஞ்ஞான அடிப்படையிலும், எவ்வாறு சாப்பிட் டால், எவ்வளவு சாப்பிட்டால், உடல் திடமாக இருக்கும், நோயில்லாமல் இருக்கும் என்றெல்லாம் அறிஞர்கள் பலவாறு விளக்கிக் கூறுவார்கள்.