பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74
விளையாட்டுச் சிந்தனைகள்
 


நின்று பணியாற்றுபவர் மிக எச்சரிக்கையுடன் இருந்து தான் கண்காணித்து அந்த ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிருர். ஆனால், அவர் சரியாக ஆட்டத்தைப் பற்றி முடிவெடுத்துக் கூறவில்லை என்ற குற்றச் சாட்டு எழுகிறது. பொது மக்களிமிருந்து வந்தால் அதை பொறுத்துக் கொள்ளலாம். அவர்களின் கணிப்பு அவ்வளவு தான் என்று.

போட்டியாளர்களிடையே குற்றச் சாட்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்ருல் அவர்கள் ஆர்வத்தின் காரணமாக, ஆவேசத்துடன் சிலசமயம் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவாக பேசிலுைம் பேசலாம்.

ஆனல், நடுவருக்கு அருகேயோ அல்லது எதிர்த் தாற் போல நிற்கின்ற, நடுவருக்குரிய தகுதி பெற்றுள்ளவர்கள், மேலே நின்று நடுவராகப் பணியாற்றுபவரைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கின்ருர்கள். அவர்கள் கூறுகின்றவற்றை யெல்லாம் ஆட்டத்தைப் பார்க்கும் மற்றவர்களும் கேட்கின்ருர்கள். அதாவது, நடுவராகப்பணியாற்று கின்றவருக்கு, ஆட்டத்தின் விதிகளைப் பற்றியே எதுவும் தெரியாது என்றும், முன்பின் அந்த ஆட்டம் ஆடிப் பழகாதவர் என்றும் பிறர் புரிந்து கொள்ளுகின்ற அளவிலே விமரிசனம் செய்து கொண்டேயிருக்கின்ருர்கள்.

போட்டி ஆட்டம் முடிகிறது. நடுவர் கீழே இறங்கி வருகிருர். வேறு ஒரு போட்டி தொடங்கு கிறது. குறை கூறி முன்னே குறை கூறிப் பேசிக்