பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

விளையாட்டுச் சிந்தனைகள்


சமுதாயத்தில் மதிக்கப் படுவோம். விளையாட்டுத் துறையும் பெருமைப்படுத்தப் படும். நலங்கிள்ளி நெடுங்கிள்ளி என்று சோழனும் சோழனும் போர்க் களத்தில் போரிட நிற்கின்ருர்கள். அப்பொழுது சமாதானம் செய்யப் போகின்ற புலவர் ஒருவர் பேசுகின்ருர், ஒருவர் தோற்பினும் தோற்பது தும் குடியே. இருவர் வெல்லுதல் இயற்கையுமன்று' என்று கூறுகின்ருர்.

அதுபோலவே, ஒருவர் இழிவு படுத்தப்பட்டா லும் இழிவடைவது நம் விளையாட்டுத் துறையே என்பதை உணர்ந்து நம் நிலையையும் விளையாட்டுக் கலையையும் மேம்படுத்தப் பாடுபடுவோமாக!

ஒரே வழி

விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமென்ருல் ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் லட்சியப் பயணம். ஒரே சிந்தனை. அதே சிந்தனைக்கேற்ற ஆக்கவேலே. கருமமே கண்ணுயினர்' என்பது போல காரியங்கள். அதை விட்டு விட்டு, ஆற்றில் ஒடுகின்ற அத்தனை மீன்களையும் குறி பார்த்துக் கொண்டு அலைபவன், ஒரு மீனையும் பிடிக்க முடியா தது போல, வெற்றிக்கான நோக்கமும் விவேகமும் இல்லாதவர்கள் எதையுமே சாதிக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் அலைபவர்கள் எதையும் பெற முடியாது. பெறவே முடியாது.

சொர்க்கத்திற்கு ஒரு வழி. நரகத்திற்குப் பல வழி என்பார்கள். தோல்விக்குப் பல வழிகள்