பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99



9. வளைவு (Curve)

ஓடுகளம் அமைந்திருக்கும் மைதானமானது, ஒவல் (Oval) அதாவது முட்டை வடிவ அமைப்பில் தான் அமைந்திருக்கும் இப்படி அமையப் பெற்றிருக்கும் பந்தயக் பாதையானது (Track) நேராக உள்ள 2 நீளப்பகுதிகளாலும் வட்டப்பகுதியாக 2 வளைவுப் பகுதிகளாலும் ஆன தாகும். இந்த நீள வளைவின் அளவானது, மைதானக் கிடைக்கின்ற பரப்பளவை வைத்துத்தான் நிர்ணயிக்கமுடியும்.

10. விரைவோட்டம் (Dash)

குறைந்த தூர ஒரு ஓட்டப்போட்டியை,மிக விரைவாக ஓடி முடிக்கின்ற இயல்பினால், இப் பெயர் பெற்றிருக்கிறது. இந்தக் குறைந்த தூரம் என்பது 50 கெஜ தூரத்தில் ஆரம்பித்து 400 மீட்டர் தூரம் வரை நீடிக்கும்.

ஒலிம்பிக் போட்டிகளில் உள்ள விரைவோட்டங்கன் 100 மீ. 200 மீ. 400 மீட்டர் ஆகும். பொதுவாக நடை பெறும் ஓட்டப் போட்டிகளில் 100 கெஜம், 220 கெஜம், மற்றும் சில பகுதிகளில் 50 கெ, 60 கெ, 70 கெஜ தூரத்திலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனை Spirnt என்றும் செல்வார்கள்.

11. தேர்வில் சமநிலை (Dead heat)

ஒரு ஓட்டப் போட்டியில் இரண்டு மூன்று ஓட்டக்காரர்கள் ஒன்று போலவே சமமாக ஓடி முடித்து. ஒரே இடத்தை வகிக்கும் பொழுது நிலவுகிற சூழ்நிலைதான் தேர்வில் சமநிலை என்று கூறப்படுகிறது.

12. பத்து நிகழ்ச்சிப் போட்டிகள் (Decathlon)

ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்படுகின்ற சகல வல்லமை நிறைந்த உடலாளரைக் காணும் பெரும் போட்டி நிகழ்ச்சி