பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


17. கள நிகழ்ச்சிகள் (Field events)

ஓடுவது போலவே, ஏதாவது ஒரு எடையுள்ள பொருள் எறிவது அல்லது தாண்டுவது போன்ற நிகழ்ச்சிகள் தான் கள நிகழ்ச்சிகள் என்று கூறப்படுகிறது. எறியும் நிகழ்ச்சிகள் என்றால், இரும்புக் குண்டு எறிதல், வேலெறிதல், தட்டெறிதல், சங்கிலிக் குண்டினை சுழற்றி எறிதல் போன்ற நான்கு நிகழ்ச்சிகளாகும்.

தாண்டும் போட்டி நிகழ்ச்சிகள் என்றால், நீளத் தாண்டல், மும்முறைத் தாண்டல், உயரத் தாண்டல், கோலூன்றித் தாண்டல் என்று நான்கு வகைப்படும். எறியும் நிகழ்ச்சிகள் மற்றும் நீலதாண்டல், மும்முனைத் தாண்டல் ஆகிய ஆறு நிகழ்ச்சிகளும் ஒரு உடலாளர் 6 முறை எறிய வாய்ப்புகள் (Trial) உண்டு.

உயரத்தாண்டல் மற்றும் கோலூன்றித் தாண்டும் நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு தாண்டும் உயரத்திற்கும் 3 தடவை முயன்று பார்க்கும் வாய்ப்புகள் (Chances) உண்டு. இந்த எட்டு நிகழ்ச்சிகளும் ஒலிம்பிக் பந்தயத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரதான நிகழ்ச்சிகளாகும்.

18. முடிவெல்லைக்கோடு (Finish Line)

ஓட்டப் போட்டிகளில், ஒவ்வொரு ஓட்டத்தின் தூரம் முடியும் முடிவு எல்லையில், ஓட்டப் பாதை (Track) இரு புறமும் நிறுத்தப்பட்டிருக்கும் கம்பங்களில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் நூல் கயிறும், அதற்கு கீழே உள்ள எல்லைக்கோடும் தான் முடிவெல்லைக் கோடாகக் குறிக்கப்படுகிறது.

19. எறிபொருளின் பயணப்பாதை (Flight)

உடலாளர் ஒருவரால் எறியப்படுகின்ற எடையுள்ள நூதன (தட்டு, வேல், இரும்புக்குண்டு)மானது, அந்தரத்-