பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106

 ஆண்களுக்கான தடையும் உயரமும்

தூரம் உயரம்
1) 110 மீட்டர் ஓட்டம் 1,067 மீட்டர்
2) 200 மீட்டர் ஓட்டம் 0.762 மீட்டர்
3) 400 மீட்டர் ஓட்டம் 0.914 மீட்டர்
பெண்களுக்கான தடையும் உயரமும் 
1) 100 மீட்டர் ஓட்டம் 0.840 மீட்டர்
2) 400 மீட்டர் ஓட்டம் 0.762 மீட்டர்

ஒவ்வொரு உடலாளரும் தனது ஓட்டப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 10 தடைகளையும் தாண்டித் தாண்டியே ஓடி முடிக்க வேண்டும்.

27. உள்ளக விளையாட்டுப்போட்டிகள் (Intramurals)

இந்த ஆங்கிலச் சொல்லுக்கு நான்கு சுவர்களுக் குள்ளேயே என்பது பொருளாகும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் உள்ள வகுப்புகளுக்கிடையே அல்லது சங்கங் களுக்கிடையே என, அவர்களுக்கு உள்ளேயே நடத்தப் பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளுக்குத்தான் உள்ளக விளையாட்டுக்கள் என்பது பெயராகும்.

28. வேல் அல்லது ஈட்டி (Javeline)

தலைப்பாகம் உலோகத்தால் ஆகி கூர்மையான நுனி யுள்ளதாகவும், மத்திய பாகம் நூற்கயிற்றால் கட்டப்பட்டு பிடிப்புக்காகவும் (Grip), இறுதி பாகம் வால் போன்ற அமைப்புக் கொண்டு, நீண்டதாகவும் எறியப் பயன்படும் வேலானது அமையப் பெற்றிருக்கிறது.