பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
107

ஆண்கள் பெண்களுக்கு எறியும் வேலின் அளவு

ஆண் பெண்
எடை : 800 கிராம் எடை : 600 கிராம்
நீளம் : 250 மி. மீட்டரி லிருந்து 270 மி.மீ. வரை. நீளம் : 2,20 மி. மீட்டரி லிருந்து 2.80 மி.மீ. வரை

29. வேலெறிதல் (Javelin Throw)

தூரமாக எறியும் திறனுக்காக அமைக்கப்பட்ட போட்டி நிகழ்ச்சியாகும் இது. வேல் எறிவதற்காக. வேகமாக ஓடி வருகிற ஒடு பாதையின் நீளம் குறைந்தது 30 மீட்டரிலிருந்து அதிகமாக 36.5 மீட்டர் வரையாவது இருக்க வேண்டும். அங்கே குறிக்கப்பட்டுள்ள 4 மீட்டர் தூரத்திற்கும் 1.50 மீ. அகலத்திற்கும் அமைக்கப்பட்ட கோட்டின் பின்புறமிருந்து தான் எறியவேண்டும். வேலெறிபவர், வேலில் உள்ள நூல் சுற்றுப் பிடிப்பினைப் பிடித்துக் கொண்டு தான் வேலெறிய வேண்டும், எறியப் பெற்ற வேலானது, தரையில் தனது தலைப்பாகமான இரும்புக் கூர்முனையில் குத்திக்கொண்டு விழுந்தால் தான், அது சரியான எறியாகும். எறியப்பட்ட வேலானது அந்தரத்தில் முறிந்து போனால், எறிந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு ஒருபோட்டியில் ஒருவருக்கு 6 எறி வாய்ப்புகள் உண்டு.

30. முடிவு எல்லைத் துணை நடுவர்கள்
(Judges at the Finish)

அந்தந்த ஒட்டப் போட்டியின் முடிவு எல்லையைக் குறிக்கும் கோட்டின் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கம்பங்களுக்குப் பின்னே, கொஞ்ச தூரம் தள்ளி நின்றபடி, தங்கள் பணியினைத் தொடர்வார்கள் முடிவெல்லைத் துணை நடுவர்கள்.