பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

வேண்டும். சாட்டிய குற்றம்  நிரூபிக்கப்படாவிட்டால், கட்டிய கட்டணம் திருப்பிதர மாட்டாது.

46. விளம்பரக் குழு (Publicity Committee)

விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்திகள் விவரங்கள் விளக்கங்கள் அனைத்தையும் பொது மக்களுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்ற சம்பந்தப்பட்ட (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள்) உடலாளர்களுக்கும் அறிவிக்கின்ற பொறுப்பு விளம்பர குழுவை சார்ந்ததாகும். இவையனைத்தும் போட்டிகள் நடக்கவிருக்கும் பல நாட்களுக்கு முன்னதாகவே, முறையோடு உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

47. இறுதிப் போட்டிக்குத் தகுதி (Qualify)

ஒரு குறிப்பிட்டப் போட்டி நிகழ்ச்சிகளில் முதலில் பூர்வாங்கப் போட்டிகளிலும் அதாவது முதல் கட்டப் போட்டிகளிலும் பங்கு பெற்று கலந்து கொண்டர்களில் முதவதாக வரும் அறுவர்களைத் (சில போட்டிகளில் எட்டு பேர்கள்) தேர்தெடுக்கப்பட்டு இறுதி போட்டிக்குத் (Finals) தகுதி பெரும் தன்மையைத்தான் இக்கலைச்சொல் குறிப்பிடுகிறது.

48. ஒட்டப்போட்டி (Race)

வேகமாக ஓடுவதில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் போட்டிக்குத்தான் ஓட்டப்போட்டி என்று அழைக்கப்படுகிறது. எல்லாவிதமான ஓட்டங்களும் இப்பெயரில் அடங்குகிறது. இதே பெயரில் குதிரைகள், வாகனங்கள், சைக்கிள் மற்றும் படகுப்போட்டிகள் போன்ற எல்லா விதமான வேகமாக செலுத்தப்படும் போட்டிகள் அனைத்தும் அடங்குகின்றன.