பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


ரிப்பன் இரண்டாம் பரிசுக்கும், வெள்ளை ரிப்பன் மூன்றாம் பரிசுக்கும் தரப்படுவது வரன் முறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

54. இரண்டாம் வெற்றியாளர் (Runner-Up)

ஒரு போட்டியில் பங்குபெற்று தனக்குரிய வாய்ப்புக்கள் அனைத்தையும் முயன்று பயன்படுத்தி, இறுதி நிலையில் வெற்றி பெறும் வாய்ப்பையிழந்து, இரண்டாவது நிலையை அடைபவரைத்தான் இரண்டாம் வெற்றியாளர் என்கிறோம்.

55. தொடக்கக் கோடு (Scratch line)

நீளத்தாண்டல் வேலெறிதல் போன்றவற்றிலும் ஒட்டப் போட்டிகளுக்கு, முன்புறமாகவும் குறிக்கப்பட்டிருக்கும் கோடுதான் தொடக்கக் கோடு.

தாண்டுபவர்கள் இந்தக் கோட்டை மிதிக்காமல் தாண்ட வேண்டும். எறிபவர்கள் இந்தக் கோட்டைத் தீண்டாமல் தான் எறிய வேண்டும். ஒடத் தொடங்குபவர்கள், ஒட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இந்தக் கோட்டைத் தொடுவதோ அல்லது மிதிப்பதோ கூடாது.

56. இரும்புக் குண்டு எறிதல் (Shot Put)

இரும்பு அல்லது பித்தளையால் அல்லது அதற்கு இணையான வேறு எந்தப் பொருட்களினாலாவது உருண்டை வடிவமானதாகவும், மழமழப்பாகவும் வழ வழப்புள்ளதாகவும் இரும்புக் குண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் போட்டிக்குரிய எடை 16 பவுண்டு (7.260 கி.கி) பெண்களுக்கு 8 பவுண்டு 13 அவுன்ஸ் (4.000 கி. கிராம்) 8;அடி ஆரமுள்ள வட்டம். 4 அடிநீளம் 4.5 அங்குல அகலமும் 2 அங்குல கனமும் உள்ள தடைப் பலகை (Stop board)