பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

ஓடவிட வேண்டும். துப்பாக்கியால் அல்லது விசிலால் ஒலி செய்து ஓட விடலாம். ஒட விடுவதற்கு முன்னர் தலைமை ஓட்ட நடுவர் மற்றும் தலைமை நேர கண்காணிப்பாளர் இவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதம் பெற்ற பிறகே ஓட வேண்டும்.

59.ஒட உதவும் சாதனம் (Starting BlocK)

ஒட்டத்தை விரைவாகத் தொடங்குவதற்கு உதவுவதற்காக இந்தக் கால் வைத்து உதைத்து எழும்பும் கட்டை பயன்படுகிறது. ஒவ்வொரு ஒட்டக்காரரும் தனக்கு சொந்தமான இந்தச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஓடுவதற்கு முன்னர் சாதனத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கால்களும் தரையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் எளிதாகப் பொருத்தப்படுவதாகவும் அகற்றப்படுவதாகவும் கூடிய அமைப்பில்தான் ஒட உதவும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஓடும் பாதையில் எதுவும் பாதிக்கப்படாத வகையில் தரையில் பதிக்கப்பட வேண்டும்.

60.பல தடை ஓட்டம் (Steeple Chase)

ஒட்டப் பாதையில் பல தடைகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கடந்து ஓடும் போட்டியின் தூரம் 2000 மீட்டர் அல்லது 3000 மீட்டர் என்று ஒலிம்பிக் பந்தங்களில் நிர்ணயிக்கப்படுகின்றன. 2000 மீட்டர் தூரம் என்பது (Junior) இளைஞர்களுக்கானதாகும். 8000 மீடடர் ஒட்டப் போட்டியில் 28 முறை தடைகளைத் தாண்டுதல் 7 முறை நீரில் தாண்டிச் செல்லல் (Water Jumps) இருக்கு . 2000 மீட்டர் ஒட்டம் என்றால் 18 முறைத் தடைகளைத் தாண்டுதல் 5 முறை நீரில் தாண்டிச் செல்லல் இருக்கும்.

வி. க. அ-8