பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

திருக்க வேண்டும்) அந்தப் பக்கத்தின் கடைக் கோட்டில், அல்லது பக்கக் கோட்டில், முனைக் கொடிக் கம்பத்திலிருந்து 5 கெஜம் வரையிலுள்ள இடத்தில், எங்கேனும் ஓரிடத்தில் பந்தை வைத்துத் 'தனி அடி' எடுக்கின்ற அல்லது உள்ளே தள்ளி விடுகின்ற வாய்ப்பைத் தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவர் பெறுகிறார்.

முனை அடி எடுக்கப்படும் பொழுது, இரண்டு கால்களும் கோல்களும் கடைக் கோட்டிற்குப் பின்னால் இருக்குமாறு தடுக்கும் குழுவினர் எல்லோரும் ஆடுகளத்திற்கு வெளியே நிற்க வேண்டும். அடிப்பவரைத் தவிர, தாக்கும் குழுவினர் எல்லோரும் அடிக்கும் வட்டத்திற்கு வெளியே, இரண்டு கால்களும் அவர்களது ஆட்டக் கோல்களும் இருக்குமாறு நிற்க வேண்டும். முனை அடியில் பந்தை நேராக இலக்கினுள் அடித்து வெற்றி எண் பெற முடியாது.

9.தடுத்தாடும் (Defending Team)

தாக்கும் குழுவினர் வசம் பந்து இருந்து, அவர்கள் எதிர்க்குழு இலக்கிற்குள் பந்தை அடித்து வெற்றி எண் பெறுவதற்காக ஆட முயற்சிக்கும் தருணத்தில், தங்கள் இலக்கிற்குள் பந்தினை செல்ல விடாது. தடுத்தாடும் முயற்சியில் ஈடுபடுகின்ற குழுவினர், தடுத்தாடும் குழுவினர் என்று கூறப்படுவார்.

10. வெளியேற்றப்படும் ஆட்டக்காரர் (Disqualification)

விதிகளைமீறி, முரட்டுத்தனமாக ஆடுகின்ற ஓர் ஆட்டக்காரர், அல்லது பிறர் அருவெறுக்கத் தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர், நடுவரின் எச்சரிக்கைக்குப் பிறகு மீண்டும் அதே செயலைத் திரும்பிச் செய்யும் பொழுது, ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படுகிறார். இது