பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


தவறுகள்; பந்தை அடிப்புறமாக வெட்டி உயர்த்தி ஆடுதல்; பந்தைக் கோலால் தூக்கி அடித்தல்; கைகளால் பந்தைத் தள்ளுதல்; (இலக்குக் காவலனைத் தவிர) பந்தைக் காலால் உதைத்தல்; கோலின் வட்டமான மேல் பகுதியால் பந்தை ஆடல்; அடுத்தவர் கோலினை அடித்தல்; எதிராளியை மோதித் தள்ளுதல்; எதிராளி பந்தினை ஆடும் பொழுது இடையிலே போய் விழுதல்; கோல் இல்லாமல் ஆட்டத்தில் கலந்து கொள்ளுதல், ஆட்டத்தை வேண்டுமென்றே தாமதம் செய்தல், அந்தந்த சூழ்நிலைக் கேற்ப தண்டனையை நடுவர் வழங்கிடுவார்.

14.தனி அடி (Free Hit)

ஒரு குழுவின் ஆட்டக்காரர் ஒருவர் இழைத்த தவறுக்காக, தவறு நடந்த இடத்திலிருந்து, எதிர்க்குழு ஆட்டக்காரர் ஒருவருக்கு அதே இடத்தில் பந்தை வைத்து, அடுத்தவர் இடையீடின்றி அடிக்கும் 'தனி அடி' எனும் வாய்ப்பு நடுவரால் கொடுக்கப்படுகிறது. தனி அடி அடிக்கும் முன்' பந்தானது தரையில் அசைவற்று நிலையாக வைக்கப்பட வேண்டும். ஆட்டக்காரர் யாராக இருந்தாலும், 5 கெச தூரத்திற்குத் தள்ளி தான் நிற்க வேண்டும். தனி அடி அடித்தவரே, பிறர் பந்தை விளையாடுவதற்கு முன் , தானே இரண்டாவது முறையாக ஆடக் கூடாது.

15.இலக்கு (Goal)

ஒவ்வொரு கடைக் கோட்டின் மத்தியிலும், ஒரு இலக்கு உண்டு. இலக்கின் அகலம் 4 கெஜம். இலக்கின் உயரம் 7 அடி. இரு கம்பங்களின் மேல் உயரத்தை ஒரு குறுக்குக் கம்பம் இணைத்து இலக்கினை உருவாக்கியிருக்கிறது, இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் இவற்றின் அகலம் 2 அங்குலமாகவும், கனம் 3 அங்குலத்திற்கு மிகாமலும் . நீண்ட சதுரம் பெற்ற கம்பங்களின் ஓரங்கள் (Edge) ஆடு