பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எறி என்று அழைக்கப்படுகிறது.

30.தனி எறி கோடு (Free Throw line)

தனி.எறி எறிபவர் நின்று எறிகின்ற இடம்தான் இது.

ஆடுகளத்தின் இருபுறமும் இருக்கின்ற தனி எறிப் பரப்பில் இக்கோடு குறிக்கப்பட்டிருக்கிறது.

தனி எறிப் பரப்பில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கடைக்கோட்டுக்கு இணையாக இக்கோடு இருப்பதோடல்லாமல், கடைக் கோட்டின் உட்புற விளிம்பிலிருந்து, தனி எறிக் கோட்டின் விளிம்புவரை 5.80 மீ. தூரம் இருக்க வேண்டும்.

தனி எறிக்கோட்டின் நீளம் 3.60 மீட்டர் ஆகும்.

31. தனி எறிப் பரப்பு எல்லைக் கோடு (Free Throw Lane) -

ஆடுகளத்தினுள் குறிக்கப்பட்டிருக்கும் தனி எறிப் பரப்பின் கோடுகள், கடைக்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து 3 மீட்டர் நீளத்தில் இரு புறங்களிலிருந்தும் தொடங்குகின்றன.

தனி எறிக் கோட்டின் மையத்திலிருந்து 1.80 மீட்டர் நீளத்தில் இருபுறமும் நீண்டுள்ள இரு கோடுகளுடனே, முன்னே கூறப்பட்ட தனி எறிப் பரப்பின் கோடுகள் முடிவடைகின்றன.