பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48

குறிப்பது: ஆடும் நேரத்தில் பெறுகின்ற கள வெற்றி எண்களை (Field Goal) தனி எறியில் பெறுகிற வெற்றி எண்களைக் குறித்தல் : ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தரப்படுகின்ற தனியார் தவறுகள். தனிநிலைத் தவறுகளைக் குறித்தல்: 5வது முறை தவறைப் பெறுகின்ற ஆட்டக்காரர் பற்றி நடுவருக்கு அறிவித்தல்; ஒவ்வொரு குழுவும் எடுக்கின்ற ஒய்வு நேரங்களைக் குறித்தல் போன்றவற்றைக் குறிக்கின்ற அதிகாரிக்கு வெற்றி எண் குறிப்பாளர் என்பது பெயராகும்.

50. கைத்திரை (Screen)

பந்துடன் முன்னேறிச் செல்லும் ஒரு ஆட்டக்காரரை அவர் விரும்பிச் செல்லும் இடம் சென்று சேராமல், கைகளை அசைத்து நிறுத்தும் முறைக்கு கைத்திரை என்று பெயர். அதாவது, பந்துடன் முன்னேறுபவரின் பாதையை நேரே நின்று மறைக்காமல், 3 அடிக்கு அப்பால் நின்று, கைகளை முகத்திற்கு நேரே அசைத்து ஆட்டி குறியை மறைக்கலாம். அப்படிக் கைத்திரை இடும் பொழுது, அவர் கண்களுக்கு அருகே கைகளை நீட்டி மறைக்கக் கூடாது.

51. குறியுடன் உதை (Shooting)

பந்தைக் குறியுடன், பத்தடி உயரத்தில் பொருத்தப் பட்டிருக்கும் வளையத்திற்குள் விதிகளை மீறாமல் எறியும் முயற்சிக்கு குறியுடன் எறிதல் என்பது பெயராகும்.

52. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

ஒரு குழுவில் 10 ஆட்டக்காரர்கள் இருப்பார்சள் அதில் 5 பேர் நிரந்தர ஆட்டக்காரர்கள். மீதி 5 பேர்கள் மாற்றாட்டக் காரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.