பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55

அல்லது எதிர்க்குழுவிற்கு ஒரு வெற்றி எண் தரப்படும் என்கிற முறையில் தண்டனை அறிவிக்கப்படும்.

10. ஆடு களம்(Court)

ஆடுகளத்தின் நீளம் 18 மீட்டர் அகலம் 9 மீட்டர் தரையிலிருந்து 7 மீட்டர் உயரத்திற்கு எந்த வித தடங்கலும் இருக்கக் கூடாது. பக்கவாட்டில் 3 மீட்டர் தூரத்திற்கு தடங்களில்லாத திறந்த வெளிப் பகுதியாகவும் இருக்க வேண்டும். ஆடுகளத்தின் தரை சமமாக இருக்க வேண்டும். திறந்த வெளியில் அமைக்கப்படும் ஆடுகளமானது 5 மி. மீட்டர் உயரம் ஏற்றத்தாழ்வு இருக்கும் வகையில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சிமிண்டால், அல்லது மணல் பகுதியில் புல் தரையில் ஆடுகளங்கள் அமையவே. கூடாது என்பதும் விதியாகும்.

11.நடுக்கோடு(Centre Line)

வலைக்கு நேராக, கீழாகக் குறிக்கப்பட்டு ஆடுகளத்தை. இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பக்கக் கோடுகளுடன் முடிந்து விடுகிற கோட்டுக்கு நடுக்கோடு என்று பெயர்.

12.நிலைப்பந்து (Dead Ball)

ஆட்ட நேரத்தின் போது ஒரு வெற்றி எண் எடுத்ததற்குப் பிறகு; அல்லது ஆட்டக்காரர்கள் இடம் மாற்றிக் கொண்டு நிற்கிறபொழுது; பந்து நிலைப்பந்தாக ஆகிவிடுகிறது. அதாவது பந்து ஆடப்படாமல் ஏதாவது ஒரு காரணத்தால் தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப் படுகிறபொழுது பந்து, ஆட்டத்தில் ஆடப்படவில்லை என்பது தான் பொருள்.