பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61

பனியனின் பின்புறம் உள்ள அளவு 15 செ.மீ. அதாவது 6 அங்குலம்.

அகில உலகப் போட்டிகளில், ஒவ்வொரு குழுத்தலைவனும் தன் சட்டைக்குரிய நிறத்திலிருந்து வேறுபட்டதாக விளங்கும் ஒரு வண்ணத்தில், தனது சட்டையின் இடப் பக்கத்தில், மார்புப் பகுதியில் இருப்பதுபோல 80 செ.மீ.X 5 செ.மீ. பரப்புள்ள ஒரு அடையாளச் சின்னத்தை (Badge) அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

25. சொந்தப்பகுதியும் எதிர்ப்பகுதியும் (Own Court And Opponents Court)

ஒரு குழு தான் இருந்து ஆடுகின்ற ஆடுகளப் பகுதியை சொந்தப் பகுதி என்று கருதுகிறது. எதிராட்டக்காரர்கள் நின்று ஆடுகின்ற பகுதியை எதிர்ப்பகுதி என்று அழைக்கிறது.

26.வலைக்கு மறுபுறம் ஆடுதல் (Over the Net)

வலைக்கு மேலே பந்தைத் தொட்டு விளையாடுகின்ற நேரத்தில் கைகள் வலைக்கு மறுபுறம் செல்கின்ற முறையை வலைக்கு மறுபுறம் ஆடுதல் என்று கூறப்படுகிறது.

எதிர்க்குழு பகுதியில் வலைக்கு மேலே பந்து இருக்கும். போது எதிராளி ஆடுவதற்குமுன் பந்தை விளையாடினால், அது தவறாகும். ஆனால் அதே நிலையில் உள்ள பந்தை, எதிராளி ஆடும்பொழுது தொட்டால், அது தவறில்லை.

தடுப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பந்தைத் தொடாமல் வலைக்கு மறுபுறம் கைகள் சென்றாலும், பந்தைத் தாக்கி அடித்தபின் அந்த வேகத்துடன் வலைக்கு மறுபுறம் அடித்த கை சென்றாலும் அது தவறாகாது.