பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63

நேரத்தில், அவரவர்க்குரிய இடங்களில் நிற்க வேண்டும். அவர்கள் இரண்டு வரிசையாக நிற்க வேண்டும். ஆனால், அந்த வரிசை நேர்க்கோட்டைப் போன்று ஒழுங்காக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

வலைக்கு அருகில் உள்ள மூன்று ஆட்டக்காரர்களும் 'முன்வரிசை ஆட்டக்காரர்கள்' என்றும், மற்ற மூவரும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். ஆட்டம் தொடங்கும் பொழுது அவர்கள் நின்றாடும் இடமானது குறிப்பேட்டில் இவ்வாறு குறிக்கப்படும் வலமிருந்து இடம் 2,3,4 என்பது முன்வரிசையினர் நின்றாடும் இடம் 1,6,5 என்பது பின்வரிசையினர் நின்றாடும் இடமாகும்.

30 சேர்த்துத் தள்ளுதல் (Pushing)

ஆட்ட நேரத்தில் பந்தை விரல்களினால் தள்ளி விளையாடாமல் உள்ளங்கைகளில் பந்து தேங்குமாறு வைத்துச் சேர்த்துத் தள்ளி விளையாடுவது, இது தவறான ஆட்டமுறையாகும்.

31.நடுவர் (Referee)

ஒரு போட்டி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும், ஆட்டக்காரர்களிலிருந்து ஆட்ட அதிகாரிகள் வரைக்கும். எல்லோருக்கும் இவர் தலைவராக இருந்து ஆட்டத்தை ஒழுங்குற நடத்துபவராக இருக்கிறார். விதிகளின் படியும், மற்றும் விதிகளில் குறிப்பிடாத எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் ஒரு முடிவு காண இவருக்குப் பூரண அதிகாரம் உண்டு, மற்றத் துணை நடுவர்கள் எடுக்கின்ற முடிவினையும், சரியில்லை என நினைக்கிற போது இவருக்கும் மாற்றிட அதிகாரமுண்டு. அவரது முடிவே முடி வானது இவர் ஆடுகள நடுக்கோட்டின் ஒரு பக்கத்தில்,