பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64

வலையிலிருந்து 1'.08" தூரத்தில் உயரத்தில் நின்று. ஆட்டத்தைக் கண்காணிப்பார்.

32.இடம் மாறி நிற்கும் முறை (Rotation Order)

சர்வீஸ் போடும் குழுவினர் தவறிழைத்தால் சர்வீஸ் போடும் வாயப்பு எதிர்க்குழுவினருக்கு மாற்றித் தரப்படும். இடம் மாற்றிக் கொள்ளவும்.என்று நடுவர் அறிவித்தவுடன். சர்வீஸ் போடும் குழுவினர் உடனே தங்களது நின்றாடும் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு மாறி நின்று கொள்ள வேண்டும். அதாவது பந்தை சர்வீஸ் போடும் வாய்ப்புப் பெற்ற குழுவினர் கடிகார முள் சுற்றுகிற நிலையைப் போல, (Clock wise) நிற்கும் ஒரு இடத்தை (One Position) உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

33.ஏந்தி ஆடுதெல் (Scooping)

பந்தை எப்பொழுதும் தாக்கி ஆட வேண்டும். நொடி நேரம் கூட பந்து கைகளில் தேங்கி நின்றாலும் அது தவறான ஆட்டமுறையாகும். பந்து தேங்கினால் அதனைப் பந்தைப் பிடித்தாடியதாகக் குற்றம் சாட்டப்படும். பந்தை அடிக்காமல், கைதொடர்ந்து செல்லுமாறு ஏந்தி ஆடினால், பந்தை ஏந்தித் தள்ளி ஆடினதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடும்.

34.ஆட்டக் குறிப்பாளர் (Scorer)

ஆட்டம் தொடங்குவதற்குமுன், ஆட்டக்காரர்கள், மாற்றாட்டக்காரர்கள் மற்றும் குழு மேலாளர்கள், பயிற்சியாளர்கள் பெயர்களை ஆட்டக் குறிப்பேட்டில் குறித்து வைப்பார். கேட்கப்படுகின்ற ஓய்வு நேரங்களையும், குழுக்கள் வெற்றி எண்கள் பெறுவதையும் குறித்து வைப்பார் ஆட்டக் காரர்களின் நின்றாடும் இடங்களையும் சுற்று. முறைகளையும் குறித்துக் கண்காணித்திருப்பார். முறை ஆட்டம் முடிந்த