பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74

இருக்கிறது. தக்கையாலும் முறுக்கேறிய நூல்களாலும் மேலும் தோலினாலும் உருவாக்கப்பட்டப் பந்தின் சுற்றளவானது 8⅜ அங்குலத்திற்குக் குறையாமலும் 9 அங்குலத்திற்கு மேற்படாமலும் இருக்கவேண்டும்.

3. பந்தாடும் மட்டை. (Bat)

ஒரு பந்தாடும் மட்டையின் மொத்த நீளமானது 3½8 அங்குலத்திற்கு மேற்படாதவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பந்தடித்தாடும் அகலப் பரப்பானது எந்தக் காரணத்தைக் கொண்டும் 4½ அங்குலத்திற்கு மேற்படாமல் இருந்திட வேண்டும்.

4. ஆடுகள எல்லை (Boundaries)

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் நாணயம் சுண்டி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே. இருகுழுத் தலைவர்களும் கலந்து பேசி, எல்லையின் அளவு பற்றி இணக்கமுறப் பேசி முடிவெடுத்துக் கொள்வார்கள். அதாவது எல்லையின் தூரம் எவ்வளவு இருக்க வேண்டும். எந்த நிலையில் எத்தனை ஓட்டங்கள் தரலாம். என்பனவற்றையெல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள்.

அதன் பிறகு எல்லைக் கோடாக கொடிகள் அல்லது கொடிக்கம்புகள் மூலமாக எல்லைக் கோட்டைக் காட்ட கண்ணாம்புக் கோடுகள் போடச் செய்வார்கள். அல்லது கற்பனை கோடுகளாகவும் கொண்டு ஆட்டத்தைத் தொடங்குவார்கள்.

5. பந்தெறியால் விக்கெட் விழுதல் (Bowled)

பந்தெறியாளரால் (Bowler) ஏறியப்படும் பந்தானது நேராகச் சென்று விக்கெட் மீதுபட்டு விக்கெட் வீழ்ந்தாலும்,