பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75

அல்லது பந்தடி ஆட்டக்காரர் உடம்பின் மீது அல்லது மட்டையின் மீது முதலில் பட்டு அதற்குப்பிறகு விக்கெட் மீது வீழ்ந்தாலும், அல்லது பந்தை ஆடிய பிறகு பந்தைக் காலால் உதைத்தோ அல்லது அடித்தோ விக்கெட் விழுந்தாலும், அது பந்தெறியால் விக்கெட் விழுந்தது என்றே கருதப்படும்.

6. பந்தெறிதல்(Bowling)

ஒரு பந்தெறியாளர் ஒரு விக்கெட் புறத்திலிருந்து, மறு புறம் உள்ள விக்கெட்டைக் காத்து நிற்கும் எதிர்க்குழு பந்தடி ஆட்டக்காரரை நோக்கி (விக்கெட்டை நோக்கி) விதிமுறை பிறழாது எறியும் பந்திற்கே பந்தெறிதல் என்று பெயர்.

7. எகிரும் பந்து (Bump Ball)

பந்தடித்தாடுபவர் அடித்து ஆடுவதற்கு ஏற்றாற்போல் பந்தெறிவதுதான் இயல்பான முறையாகும். அவ்வாறு இல்லாமல், பந்தை அடித்தாடுபவருக்கு முன்பாக வேகமாகத் தரையில் மோதுவதுபோல் எறிந்து, அது அவருக்குத் தலைக்கு மேற்புறமாக உயர்ந்து சென்று பந்தைப் பிடித்தாடுவது (Catch) போன்ற அளவில் செல்வதைத் தான் எகிரும் பந்து என்று அழைக்கிறோம்.

8. பொய் ஓட்டம் (Bye)

விதிகளுக்குட்பட்டு பந்து எறிவதைத்தான் பந்தெறி (Bowling) என்கிறோம். 'முறையிலா பந்தெறி' (No Ball); 'எட்டாத பந்தெறி' என்னும் தவறுகள் தேராதபடி சரியாக எறியப்படுகிற பந்தானது, பந்தடிக்கும் மட்டையில் பட்டுவிட்டுப் போனால், அப்பொழுது ஓடி ஒட்டம் எடுத்திருந்தால், அது அடித்தாடும் ஆட்டக்காரர் கணக்கில் குறிக்கப்படும்.