பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76

அவ்வாறு இல்லாமல், அவர் மட்டையில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் படாமல் பந்து போனால், அதற்காக நடுவர் தன் ஒரு கையை தலைக்கு மேலே உயர்த்தி, கையை விரித்துக் காட்டினால், அது பொய் ஒட்டம் என்பதாகக் குறிக்கட்படும்.

9. வெற்றிச் சமநிலை (Draw)

முழு ஆட்ட நேரமும் ஆடி முடிக்கப் பெற்ற பிறகு, ஆட்டத்தின் முடிவில் இரண்டு குழுக்களும் சம எண்ணிக்கையில் ஓட்டங்கள் எடுத்திருந்தால், அந்த ஆட்டம் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலையாக முடிந்தது என்று கூறப்படுகிறது.

அதாவது, ஒரு போட்டி ஆட்டத்தின் முழு ஆட்ட நேரம் என்பது, 'முறை ஆட்டங்கள்' (Innings) என்ற அளவிலாவது: அல்லது நாள் கணக்கில் ஆட வேண்டும் என்றாவது, ஆடுவதற்கு முன் கூட்டியே முடிவு செய்து கொள்வதாகும்.

40. முடிவு நிலை அறிவிப்பு (Declaration)

பந்தடித்தாடும் வாய்ப்பினைப் பெற்று ஆடுகின்ற ஒரு குழுவின் தலைவர் (Captain) தன் குழு பந்தடித்து ஆடி திரட்டிய ஓட்டங்களின் எண்ணிக்கையானது, வெற்றி தரும் சாதகமான நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் நேரத்தில், எதிர்க்குழு தலைவரைப் பார்த்து, 'நாங்கள் பந்தடித்தாடும் உரிமையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்' என்று விடுகின்ற அறிவிப்பைத் தான் முடிவு நிலை அறிவிப்பு என்று கூறுகின்றார்கள்.

இப்படி அவர் அறிவிக்கின்ற முறைக்கு, கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. தான் முடிவு செய்கின்ற எந்த நேரத்திலும் இவ்வாறு அறிவித்து விடலாம்.