பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77

31. ஈட்டாத ஓட்டங்கள் (Extras)

ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர், எதிராளி வீசுகின்ற பந்தை முறையோடு அடித்து எடுக்கும் ஓட்டங்கள் தான் சரியான ஓட்டங்கள் என்று கணக்கில் குறிக்கப்படும். அவர் மட்டையில் பந்து படாதவாறு. அவருக்கு வருகின்ற ஓட்டங்களைத் தான் ஈட்டாத ஓட்டங்கள் என்று தனியாகக் குறிக்கப்படும். இவ்வாறு வருகின்ற ஓட்டங்களை பொய் ஒட்டம் (Byes) என்றும். மெய்படு ஒட்டம் (Leg Byes) என்றும் தனித்தனியாக சந்தர்ப்பத்திற்கேற்றவாறு குறிக்கப்பெறும்.

12. தொடர்ந்தாட விடுதல் (Follow on)

ஒரு பந்தடித்தாடும் குழுவானது, குறிப்பிட்ட ஓட்டங்கள் எடுத்திருக்கும் பொழுது, ஆட்டத்தை நிறுத்தி, அடுத்த குழுவினரை ஆடுமாறு அழைப்பதற்குத்தான் முடிவு நிலை அறிவிப்பு என்று பெயர் (10 வது பிரிவைக் காண்க) .

அவ்வாறு வாய்ப்புப்பெற்ற எதிர்க்குழு, வந்து பந்தடித்தாடி முடித்த பிறகும், அடுத்த குழுவினர் எடுத்த ஓட்டங்களை மிஞ்ச இன்னும் அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தால், அடுத்தமுறை ஆட்டத்தையும் (Inning) தொடர்ந்து ஆடுமாறு கேட்டுக்கொள்கின்ற உரிமை அறிவிப்புச் செய்த குழுத்தலைவருக்கு உண்டு.

அவ்வாறு கேட்டுக் கொள்ளும் பொழுது, எதிர்க் குழுவினரும் இணங்கி ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து ஆடத்தான் வேண்டும். அவர்களுக்கு வேறு வழியேயில்லை. இவ்வாறு ஆடுகின்ற முறையைத்தான் தொடர்ந்தாடவிடுதல் என் கிறோம்.

13. ஏமாற்று சுழல் பந்தெறி (Googly)

இது பந்தெறி முறையில் ஒரு புதிய அணுகு முறையாகும். அதாவது, பந்தடித்தாடும் ஆட்டக்காரரை நோக்கிப் பந்தெறி