பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80

அடித்தாட முயலும் நேரத்தில், தனது பந்தாடும் மட்டையால், தான் காத்து நின்றாடுகின்ற விக்கெட்டைத் தட்டி விட்டால், அவர் தானே தனது விக்கெட்டை வீழ்த்திக் கொண்டார் என்பது அர்த்தமாகும். அதற்குரிய தண்டனை - அவர் ஆட்டமிழந்து போகிறார்.

18. விக்கெட்டின் முன்னே கால் (Leg Before Wicket),

பந்தெறியால் வருகின்ற பந்தானது, ஒருவர் தடுத்தாட நிற்கும் விக்கெட்டுக்கு நேராக இருந்து ஆடும்போது, தனது கையிலோ அல்லது பந்தாடும் மட்டையிலோ முதலில் பந்து படாமல், பந்தானது இணைப்பான்களுக்கு (Bails) சற்று மேலாக வந்தாலும்; அதன் வழியில் குறுக்கிட்டு இடையிலே (காலால்) தடுத்தால் ஒரு விக்கெட்டிலிருந்து இன்னொரு விக்கெட்டிற்கு நேர்க்கோட்டு அமைப்பில் நேராக எறியப்பட்டு அது விக்கெட்டைச் சென்று தாக்கியிருக்கும் அல்லது ஆடுவோரின் வலப்புறத்தில் (off side) விழுந்த பந்தானது அவரது விக்கெட்டை நோக்கி வந்திருக்கும் என்று நடுவர் கருதினால், அவ்வாறு அபிப்ராயப்பட்டால், பந்தடி ஆட்டக்காரர் விக்கெட்டிற்கு முன்னே தனது காலை வைத்துத் தடுத்திருந்தார் என்பதாக நடுவர் கூறிவிடுவார். அதனால் அவர் ஆட்டமிழந்து போகின்றார்.

19. மெய்படு ஓட்டம் (Leg Bye)

பந்தெறியாளர் வீசுகின்ற பந்தானது, பந்தடித்தாடுபவர் மட்டையிலோ அல்லது அவரது உடலிலோ மற்றும் எந்தப் பகுதியிலும் படாமல் போனால், அப்பொழுது பந்தடித்தாடுபவர் எடுக்கின்ற ஓட்டத்திற்கு பொய் ஓட்டம் (Bye) என்று பெயர் கொடுத்து குறிப்பேட்டில் குறிக்கப்படுகிறது.

மட்டையில் படாமல், அதைப் பிடித்திருக்கும் மணிக் கட்டைத் தவிர (Wrist), மற்றவாறு உடலில் எந்தப்