பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

பந்தெறிபவர் கையிலிருந்து எறியும் போது, ஏதாவது ஒரு காரணத்தால், பந்து கையைவிட்டு வெளியே செல்லாது தேங்கிப்போவது;

தான் முறையாகப் பந்தெறிவதற்கு முன், பக்கத்தில் நின்று அடித்தாட இருக்கும் நடு பந்தடி ஆட்டக்காரரின் விக்கெட்டை (அவரடைய முயலும்போது) வீழ்த்துவதற்காக -பந்தை வீசி எறிதல்.

இவ்வாறு எறியப்படும் முறையிலா பந்தை, அந்த பந்தடி ஆட்டக்காரர் அடித்தாடலாம். ஓடி ஓட்டமும் எடுக்கலாம். அவர் எத்தனை ஓட்டமும் ஓடி எடுத்துக் கொள்ளலாம். அவரால், ஓடி ஓட்டம் எடுக்க இயலவில்லை என்றால், ஒரு ஓட்டம் தரப்படுவதற்கு விதிகள் உதவுகின்றன.

முறையிலா பந்தெறி மூலம் விக்கெட்டை வீழ்த்திவிட முடியாது. விக்கெட்டுகளுக்கிடையே ஓடும்போது, விக்கெட்டை வீழ்த்தி, அவரை ஆட்டமிழக்கச் செய்யலாம். அவரே இரண்டு முறை பந்தாடினால், அந்தக் குற்றத்திற்காக ஆட்டமிழந்து போவார்.

22. தடுத்தாடுவோரைத் தடைசெய்வது (Obstructing The Field)

ஒரு பந்தடி ஆட்டக்காரர், தான் அடித்தாடிய பந்தை தடுத்தாட அல்லது பிடித்துவிட முயற்சிக்கும் எதிர்க் குழுவினர் வேண்டுமென்றே அவர்களது முயற்சியைத் தடுக்கும் அல்லது கெடுக்கும் முறையில் முயன்றால், அவர் தடுத்தாடுபவர்களைத் தடை செய்தார் என்ற குற்றத்திற்கு ஆளாகி ஆட்டமிழந்து போவார்.

பந்தடித்தாடும் ஆட்டக்காரர் இருவரில் யார் இந்தத் தவறைச் செய்தாலும் ஆட்டமிழப்பார். தற்செயலாகவா