பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83

அல்லது வேண்டுமென்றே செய்தாரா என்பதை நடுவரே தீர்மானிப்பார்.

23.பந்தெறி தவணை (Over)

ஒரு பந்தெறி ஆட்டக்காரர் ஒரு விக்கெட் இருக்கும் பக்கத்திலிருந்து மறுபுறம் உள்ள விக்கெட்டைக் காத்து நின்றாடுகின்ற எதிர்க் குழுவின் பந்தடி ஆட்டக்காரரை நோக்கி விதிமுறையுடன் பந்தை எறிவதற்குப் பந்தெறி தவணை என்று பெயர்

பந்தெறி தவணை என்பது தொடர்ந்தாற் போல் ஒரு புறத்திலிருந்து 6 முறை எறிவதாகும்.

24 எதிர்ப்புற ஆடும் பரப்பு (Off Side)

பந்தடிப்பதற்காக வந்திருக்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர். தான் அடித்தாடுவதற்கு முன், பந்தடி மட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் தயார் நிலையில். அவர் (பார்வை படுகின்ற) முன்பகுதி முழுவதுமே எதிர்ப்புற பகுதி என்று அழைக்கப்படுகிறது.

25. பின்புற ஆடும் பரப்பு (On Side)

பந்தடிப்பதற்காக வந்திருக்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர். தான் அடித்தாடுவதற்கு முன்பாக, பந்தடி மட்டையைக் கையில் வைத்து அடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் தயார் நிலையில், (அவர் முதுகுப் பகுதியும், விக்கெட்டின் பின்புறப் பகுதியும்) அவரது பின்புறம் பரந்து விரிந்துள்ள மைதானப் பகுதியே பின்புற ஆடும் பகுதி என்று அழைக்கப்படுகிறது.