பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


34. ஓட்டம் ( Run)

பந்தை அடித்தாடிய ஒரு ஆட்டக்காரர், தான் நிற்கிற அடித்தாடும் எல்லைக் கோட்டிலிருந்து எதிரே உள்ள பகுதிக்குச் செல்ல, அதே போல் அங்கே நிற்பவர் இந்த எல்லைக் கோட்டுக்கு ஓடி வர, இருவரும் இரண்டு எல்லைக் கோடுகளை முறைப்படி ஒரு முறை கடந்து விட்டால், ஒரு ஒட்டம் எடுத்ததாகக் கணக்கிடப்படும்.

பந்து ஆட்டத்தில் இருக்கிற பொழுது (in play) எத்தனை முறை இப்படி ஒடி முடிக்கிறார்களோ, அத்தனை ஒட்டம் எடுத்தார்கள் என்று குறிக்கப்படும்.

பந்தடி வாய்ப்பில் உள்ள இரண்டு ஆட்டக்காரர்களும் ஒருவருக்கொருவர் இடம் மாற்றிக் கொள்ள ஓடி வருவதைத் தான் ஒட்டம் என்கிறோம். ஒரு ஒட்டம் எடுக்க, விதிமுறைப் படி இருவரும் (ஒடி) பங்கு பெற வேண்டும்.


35. ஒட்டத்தில் ஆட்டமிழத்தல் (Run Out)

பந்தெறியாளர் ஒருவர், விதிகளுக்கு உட்பட்ட முறையில் பந்தெறிய, அதை பந்தடி ஆட்டக்காரர் அடித்தாடி அதனைத் தொடர்ந்து இரண்டு பந்தடி ஆட்டக்காரர்களும் ஓட்டம் எடுப்பதற்காக எதிரெதிர் விக்கெட்டை நோக்கி ஓடிச் செல்கின்றார்கள்.

அந்த 'ஒட்டம்' எடுக்கும் முயற்சியின் போது பந்தடித் தாடும் எல்லைக் கோட்டை நோக்கி (Popping Crease) ஒடிக் கொண்டிருக்கும் சமயத்தில் விக்கெட்டானது வீழ்த்தப்பட்டால் எல்லைக் கோட்டுக்கு வெளியேயுள்ள அந்த விக்கெட்டுக்குரிய பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேற்றப்படுவார்.