பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59

வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்கு அருகில் இருக்கின்ற பந்தடிக்காரரே (அவர் பந்தடி எல்லைக்குள் இல்லாமல் இருந்தால்) ஆட்டமிழந்தார் என்று நடுவரால் அறிவிக்கப்படுகிறார்.

இரண்டு பேரும் ஓட்ட முயற்சியில், ஒருவரை ஒருவர் கடக்காத பொழுது , அந்தந்த விக்கெட் அவரவருடைய விக்கெட்டாகத் தான்  இருக்கும். ஆகவே விழுந்த விக்கெட்டுக்கு அருகாமையில் எந்த பந்தடி ஆட்டக்காரர் இருக்கிறாரோ அந்த ஆட்டக்காரரே ஆட்டமிழப்பார்.

38. குறை ஒட்டம் (Short Run)

வீசிய பந்தினை அடித்தாடிய பிறகு, இரண்டு பந்தடி எல்லைக்கோட்டை நோக்கி ஓடி தமது பந்தடி மட்டையால் கோட்டின் எல்லைக்குள் தொட்டால் தான் ஒரு ஓட்டம் என்று கணக்கிடப்படும்.

அவ்வாறு செய்யாமல், அவசரத்தின் காரணமாக எதிரே உள்ள எல்லைக்கோட்டைத் தொடாமல், ஒருவர் திரும்பி வந்து விட்டாலும் அதை ஓட்டம் என்று கணக்கிடாமல் குறை ஓட்டம் என்று நடுவர் கூறி விடுவார். பந்தடி எல்லைக் கோட்டுப் பகுதியைத் தொடாமல் ஓடிவருகிற குறை ஓட்டத்தை கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

37. ஆறு ஓட்டங்கள் (Six)

அடிக்கப்பட்ட பந்தானது, உருண்டோடி மைதான எல்லையைக் கடந்து விடுகிற பொழுது 4 ஓட்டங்கள் அளிப்பது பொதுவான விதிமுறையாகும்.

வி.க அ 6