பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


காப்பாளர், எல்லையை விட்டு வெளியே வந்தவர் மீண்டும் எல்லைக்கள் வருவதற்குள். விக்கெட்டை வீழ்த்தி, அவரை ஆட்டத்திலிருந்தே வெளியேற்றி விடலாம்.

39. மாற்றாட்டக்காரர்கள் (SUBSTITUTES)

கிரிக்கெட் ஆட்டத்தில் நிரந்தர ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 11. மற்ற ஆட்டக்காரர்கள் மாற்றாட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நிரந்தர ஆட்டக்காரர் (Regular Player) ஒருவர் ஆடும் நேரத்தில், உடல் சுகவீனம் அடைந்தாலோ அல்லது காயமுற்றாலோ அவருக்குப் பதிலாக, எதிர்க்குழு தலைவரின் சம்மதத்தின் பேரில், ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தில் இறங்கி ஆட அனுமதியுண்டு.

அவ்வாறு ஆட வரும் ஒரு மாற்றாட்டக்காரர், மைதானத்தில் பந்தைத் தடுத்தாடலாம். (Field) அல்லது ஒட முடியாமல் அடித்தாடும் ஆட்டககாரருக்காக, விக்கெட்டுக்களுக்கு இடையில் ஒடி ஒட்டமும் (Run) எடுக்கலாம்.

ஆனால், அவர் பந்கை அடித்தாடவோ (Bat) அல்லது பந்தெறியவோ (Bowl) முடியாது.

அதுவும் தவிர, எதிர்க் குழுத் தலைவன், நின்று தடுக்தாடக் கூடாது என்று குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் (Position) நின்று கொண்டு அவர் பந்தைத்தடுத்தாடவும் முடியாது. 

40. பரிசற்ற பெரும் போட்டி (TEST MATCH)

இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற பெரும் போட்டிகள். இதில் பெறுகின்ற வெற்றிக்குப் பரிசு எதுவும்