பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93

குரிய நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாடும் மைதானத்திற்குள் சென்று, ஒருவர் நாணயம் சுண்டிவிட மற்றொருவர் தலையா பூவா என்று கேட்பார்.

நாணயம் சுண்டுவதில் வெற்றி பெற்றவர் தடுத்தாடுவது அல்லது பந்தடித்தாடுவது என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுகிறார்.

நாணயம் சுண்டி தேர்வு கொள்வதற்கு முன் இரு குழுக்களும் தங்களது ஆட்டக்காரர்களின் பெயர்களை குறிப்பாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். பிறகு ஆட்டக்காரர்களின் பெயர்களை மாற்றிக் கொள்ள முடியாது.இரு தலைவர்களும் இணங்கினால்தான், மாற்றிக் கொள்ள முடியும்.

43. பனிரெண்டாவது ஆட்டக்காரர் (TWELTH MAN)

இவர் அவசரகாலத்தில் ஆபத்துதவியாக இருக்கிறார், ஆட இயலாது வெளியேறும் ஆட்டக்காரர்களுக்கு பதிலாக இவர் ஆடுவதற்காக மைதானத்திற்குள் செல்கிறார். இவர் பந்தடித்தாடவோ பந்தெறியவோ முடியாது.

தடுக்தாடும் முயற்சியில் இவர் பந்தைப் பிடித்து விட்டால் (Catch). அது மாற்றாட்டக்காரர் (Sub) என்ற பெயரில் ஆட்டக்குறிப்பேட்டில் குறிக்கப்படும்.

44. விக்கெட் (Wicket)

மூன்று குறிக்கம்புகளாலும் அவற்றை இணைக்கும் 2 இணைப்பான்களாலும் ஆன ஓர் அமைப்பு. இதன் உயரம் 28 அங்குலம். அகலம் 9 அங்குலம். ஒரு போட்டி ஆட்டத்திற்கு 2 விக்கெட்டுகள் உண்டு.