பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

45. எட்டாத பந்தெறி (WIDE)

விக்கெட்டுக்கும் மேலே அதிகமான உயரமாக அல்லது பந்தடித்தாடுபவர் தனது விக்கெட்டைக் காத்து நின்றபடி என்னதான் முயற்சித்தாலும் அடிக்க முடியாதபடி எட்டாத அளவிற்குப் பக்கவாட்டில் (இரு புறங்களில் ஒன்றில்) எறியப் படுகின்ற பந்தை எட்டாத பந்தெறி என்று நடுவர் கூறிவிடுவார்,

எறியப்படும் பந்தானது. அடித்தாடமுடியாத அளவிற்கு தூரமாக எறியப்படுகிறது என்று நடுவர் கூறி. அதற்கு தண்டனையாக எதிர்க் குழுவிற்கு 1 ஓட்டம்(பரிசாக) தந்து விடுவார்.