பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
97

டிடைந்து விடுகிறது என்ற ஒரு தவறான எண்ணம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது இன்னும் சிலர். அதிக இயக்கத்தினால், இயந்திரத்தின் சாதாரண அளவை விட, உடலாளர்களின் இதயம் சற்று உப்பிப் போய் விரிவடைந்து விடுகிறது. என்றும் கூறுவர்கள். அதாவது உடலாளர் இதயம் பலவீனமானது எனபதைக் குறிக்க வந்த சொல்தான் இது.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் முயன்று கண்டுப்பிடித்திருக்கும் உண்மையானது-உடற்பயிற்சி செய்யாதவர்களை விட. உடற்பயிற்சி செய்கிறவர்களே வலிவான இதயத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றார்கள் என்பது, தான் இதயவிரிவுக்கும் பலஹீனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

8.குறுந்தடி: (Baton)

தொடரோட்டப் போட்டியின் பொழுது, ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு குறுந்தடியைப் பெற்றிருக்கும். அந்தந்த அணியினர், தங்களுக்குரிய இடத்திலிருந்து ஓடத் தொடங்கும் போது, இந்தக் குறுந்தடியைக் கையில் வைத்துக் கொண்டுதான் ஓட வேண்டும்.ஓட்ட முடிவின் போது கையில் குறுந்தடி வைத்திருக்கும் ஓட்டக்காரர்தான். விதி முறைகளின் படி ஓடி வந்தார் எனறு அறிவிக்கப்படுவார்.

ஓடும் நேரத்தில் குறுந்தடிகீழே விழுந்து விட்டாலும் மற்றவர் உதவியின்றி அவரே எடுத்துக் கொண்டு தான் ஓட வேண்டும்.

இந்தக் குறுந்தடி,மரம் அல்லது மற்ற உலோகத்தால், ஆனதாக இருந்தாலும், ஒரே துண்டால் ஆனதாகவும், உள்ளே துவாரமுள்ள உருண்டை வடிவமானதான நீண்ட