பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

14


சினிமா நடிகர்களுக்கு விசிறிகள் அதிகம். அவர்கள் அதனை சற்று மாற்றிக் கொண்டு, ரசிகர்கள் என்று இப்பொழுது தங்களை அழைத்துக்கொண்டு பெருமைப் படுகின்றார்கள். அவர்களுக்கென்று சங்கமும், அமைப்புக்களும் நிறைய உண்டு.

விளையாட்டுத் துறையிலும் அத்தகைய ரசிகர்கள் நிறைய உண்டு. தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரரைப் பெருமையுடன் பாராட்டிப் பேசுவதும், புகழ்வதும், அவரைப் போலவே நடை நடப்பதும், உடை உடுப்பதும், அவரின் வீரத்தைப் பற்றிப் பேசி மகிழ்வதும் அதிகமாகவே உண்டு. அதனை Hero Worship என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

விளையாட்டு நேரத்தில் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களையும், அவர் சார்ந்திருக்கும் குழுவையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்க என்று, மேல் நாட்டில் சங்கங்கள் நிறைய அமைந்திருக்கின்றன. அவர்கள் எங்கு சென்று விளையாடினாலும், போய் வர ஆகும் அதற்கான செலவையும் தாங்களே ஏற்றுக் கொண்டு, நேரம் வீணாகிறதே என்ற கவலையையும் மறந்து, ஆர்வத்துடன் பாராட்டி சத்தம் போடுவது, கூச்சல் போடுவது அவர்கள வழிக்கம.

அதை ஆர்வம் என்பதா? வெறி என்பதா? ஆசையின் வேகம் என்பதா? எப்படிச் சொன்னாலும் Fan என்ற வார்த்தை வந்த விதமே, வெறியின் வேகத்தினால் தான் என்று அறியும்போது, ரசிகர்கள் கூட்டம் உற்சாகத்தின் எல்லைக் குச் சென்று, மைதானத்திற்குள் புகுந்து விடுவதும், தீ வைத்து விடுவதும் போன்ற செயல்கள்