பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

16


கொண்டார்கள். அவர்களை ரோமானியர்கள், வெறி மிகுந்தவர்கள் என்பதற்காக Fanaticus என்று அழைத்தார்கள்.

அந்த Fananticus என்ற சொல்லிலிருந்து, ஒரு கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன் என்றும், தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அடிப்படைக் காரணம் எதுவென்று தெரியாமல் இனம் புரியாமல் முரட்டுத் தனமான ஈடுபாடு கொண்டவன் என்றும் பொருள் தருகின்ற Fanatic என்ற சொல் தோன்றி வந்தது. அதற்கு, புனித ஆலயத்தினால் உணர்வு பெற்றவன் என்றும் பொருள் கொண்டார்கள்.

Famaticus என்ற சொல் பின்னர் Fanatic ஆகி, பிறகு Fane என்ற பெயரில் விளங்கி, இறுதியில் Fan என்று மாறி வந்திருக்கிறது.

அதுவே தற்போது மாறி, ஏனென்று அறியாமலேயே பக்தியும் ஆசையும் கொண்டு பின்பற்றிப் பேசுகின்ற ரசிகனைக் குறிக்கின்ற சொல்லாக Fan என்று வந்து விட்டிருக்கிறது.

6. ΜΑΤCH

சாதாரணமாக பொழுது போக்குக்கென்று ஆடி மகிழ்வதை Game என்று கூறுகிறோம். இன்னொருவருடன் அல்லது அடுத்த குழுவுடன் ஈடுபடுவதை Match என்கிறோம். அதாவது போட்டி ஆட்டம் என்று கூறுகிறோம். ஒருவருடன் ஒருவர் போட்டி மனப்பான்மையுடன் பொருதி ஆடுவதற்கு Match