பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


என்று பெயர் எப்படி வந்திருக்கும் என்று ஆராயும்போது, நமக்கு அது ஆச்சரியமாகவே இருக்கிறது.

Match என்ற சொல்லானது ஆங்கிலோ சேக்சன் சொல்லான கேமாயிகா (Gamaecca) என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். இந்தச் சொல்லுக்கு கணவன் மனைவி (Husband & Wife) அல்லது ஆண் பெண் மிருகம் (Male and Female Animal) என்பது பொருளாகும்.

ஆங்கிலோ சேக்சன் சொல்லானது ஜெர்மன் மொழி பேசுபவர்களிடம் செல்லவே, அவர்கள் வசதிக்காக, அவர்களுக்குத் தேவையான மரபில், புதிதாக ஒரு பொருளை அமைத்துக் கொண்டார்கள். Match என்ற சொல் ஜெர்மானியரிடம் சென்ற பிறகு, அதற்குரிய பொருள் ஒன்று படுத்திக் கொண்டுவா (To Bring To Gether) என்று அமைந்து விட்டது.

தற்பொழுது திருமணத்திற்குப் பெண் பார்க்கும் போதும், பொருத்தமாக இருந்தால் Match ஆக இருக்கிறது என்று கூறுவதையும் நாம் கேட்கிறோம். விளையாட்டுத் துறையில் நடக்கும் போட்டியில் ஒரு குழுவுடன் இன்னொரு குழு ஆட்டத் திறமையில் பொருத்தமாக இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்கவே போட்டி என்று வைத்திருக்கலாம் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.

வாழ்க்கையில் பொருத்தம் பார்ப்பதுபோல, விளையாட்டிலும் பொருத்தம் இணை பார்க்க வைத்திருக்கின்றார்கள் என்றால், வாழ்க்கைக்கு இணையாக விளையாட்டையும் போட்டியையும்