பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

18


சேர்த்து வைத்திருக்கின்றார்கள் என்றால், வாழ்க்கைக்கு இணையாக விளையாட்டையும் வைத்திருக்கின்றார்கள் என்பதுதானே பொருளாகும்! இதைவிட விளையாட்டுக்கு வேறு என்ன பெருமை வேண்டும்.

7. ΤΕΑΜ

நாம் இதற்குத் தமிழில் குழு என்று பொருள் கூறுகிறோம். வேறு சிலர் அணி என்றும் கூறுவார்கள்.

இந்த Team என்ற சொல்லானது, பழமை ஆங்கில மொழியில் பயன்படுத்தப்பட்ட Team என்ற சொல்லிலிருந்து உருவானதாகும். அதற்குரிய அர்த்தம் என்னவென்று அகராதியைப் பார்த்தோமானால் நமக்கு வேடிக்கையாகவே இருக்கிறது.

முதல் அர்த்தம் Set என்பதாகும். அதாவது ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒழுங்காக இருக்கவேண்டும் அல்லது சரியான நிலையில் வைக்க வேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக வருவது Boord என்பதாகும். ஒரு தடவையிட்ட முட்டையின் குஞ்சுத் தொகுதி, நினைவில் ஆழ்ந்திரு என்றும் பொருள் கொள்ளலாம்.

மூன்றாவதாக வரும் சொல்லானது Litter என்பதாகும். அந்த லிட்டர் என்ற சொல்லுக்கு, காயம் பட்டவர்களைத் துக்கிச் செல்லப் பயன்படுகின்ற படுக்கை என்றும் புதிதாகப் பிறந்த மிருகத்தின் குட்டி என்று அழைக்கப்படும் என்றும், தேவையற்ற வீணான