பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


ஒரு குழுவில் 5 பேர், 9 பேர், 11 பேர் என்று அமையும் பொழுது, எண்ணிக்கைக்கு ஆட்களை இழுத்து வந்து அப்படித்தான் சில சமயங்களில் நிறுத்த வேண்டியிருக்கிறது.

ஒன்றுக் கும் பயன்படாத ஆட்களையும் அப் படித்தான் குழுவில், (குப்பை தொட்டியில் கூளங்களைப் போடுவதைப் போல) கொண்டு வந்து எண்ணிகைக்காகப் போட வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் 'ஒப்புக்குச் சப்பாணியாக இரு' என்று ஆட்களைத் தூக்கி வந்து ஒரு குழுவில் கிடத்த வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் நடைமுறையில் பார்க்கும் பொழுது, Team என்று சொல்லப்படும் வார்த்தை சரியான பொருள்களைக் குறிப்பதாகவே அமைந்திருக்கிறது.

8. RELAY


ஒரு குழுவிற்கு 4 ஒட்டக்காரர்கள் இருந்து, ஒவ்வொருவராக ஒட்டத்தைத் தொடர்ந்து ஒடி முடிக்கும் நிகழ்ச்சியை Relay Race என்கிறோம். அதற்குத் தமிழில் தொடரோட்டம் என்று நாம் கூறுகிறோம். இன்னும் ஒரு சிலர் இதனை அஞ்சலோட்டம் என்றும் கூறுகின்றார்கள். இந்தத் தொடரோட்டம் 4x 100 மீட்டர். 4X200 மீட்டர், 4x 400 மீட்டர் துரம் என அமையும்.

அதாவது உதாரணமாக, 400 மீட்டர் தூரம் என்றால் முதலாவது ஒட்டக்காரர் 100 மீட்டர் தூரம் ஒடி முடிக்க, இரண்டாமவர் அங்கிருந்து அடுத்த நூறு மீட்டர் தூரம்