பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒட, என 4 பேரும் சேர்ந்து அந்த 400 மீட்டர் துரத்தை ஒடி முடிப்பார்கள். இதுபோலவே தொடரோட்டத்திற்குரிய மற்ற நிகழ்ச்சிகளும் முடிக்கப்பெறும்.

ஒருவர் முடித்த பின் தொடர்ந்து ஒருவர் என்று ஒடுவதற்கு Relay என்று ஏன் பெயர் வந்தது என்று இனி காண்போம்.

Relay என்று சொல் பிரெஞ்சு மொழியில் உள்ள வினைச் சொல்லான Relayer என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். ரிலேயர் என்ற அந்தச் சொல்லுக்கு 'வேட்டை நாயை அவிழ்த்து விடு' என்பது பொருளாகும்.

ஆரம்ப காலத்தில் காட்டுக்கு வேட்கைக்காரர்கள் வேட்டையாடப் போகும் பொழுது, வேட்டை நாய்களையும் கூடவே கொண்டு செல்வார்கள். கண்ணில் தென்பட்ட மிருகத்தைக் கண்டவுடன், கையில் பிடித்திருக்கும் வேட்டை நாயை அவிழ்த்துவிட்டு விரட்டச் செய்வார்கள். அது ஒடி தளர்ந்துபோய் விடுகின்ற நேரத்தில், ஓடாமல் கூடவே கொண்டு போகின்ற புதிய நாய்களை உடனே அவிழ்த்து விட்டு மிருகத்தை விரட்டச் செய்வார்கள்.

ஏன் அந்த புதிய நாய்களை கூடவே கொண்டு சென்று அவிழ்த்து விடவேண்டும் எனறால், அப்பொழுதுதான் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மிருகத்தின் வாசனையை மோப்ப சக்தியால் உணர்ந்து கொண்டிருப்பது மறைந்து போகாமல் இருக்கும் என்பதற்காகத்தான்.