பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


ஒரு ஓட்டப் போட்டி எனும் பொழுது போட்டியிடுகின்ற உடலாளர்கள் Atheletes எல்லோரும் சேர்ந்து ஒரு இலட்சிய இடத்தைச் சேர்வதற்குக் கூட்டமாகவும் விரைவாகவும் ஓடி முடிப்பதையே குறிப்பார்கள்.

கூட்டமாகவும் அதே நேரத்தில் இலக்கை அடையும் இலட்சியத்தடனும் வேகமாக ஓடுவதைக் குறிக்கும் சொல்லாகவே Race என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.



11. SCORE

விளையாட்டுப் போட்டி ஒன்றில், இரண்டு குழுக்கள் வெற்றிக்காக விதிமுறைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வெற்றியை நிர்ணயிக்கின்ற அளவுகோலாக அமைந்து உதவுவது வெற்றிக்கணக்காகும் (Score). இந்த வெற்றிக்கணக்கைத்தான் அதன் உப அளவுகளாக விளங்கும் Point Goal. Run என்பனவற்றின் துணையுடன் தெரிந்து கொள்கிறோம்.

Point எனும் ஆங்கிலச் சொல்லுக்கு வெற்றி எண் என்பதாக தமிழாக்கி இருக்கிறோம். இதை சிலர் புள்ளி என்றும், வேறு சிலர் உப்பு என்றும் கூறுகின்றார்கள். பல வெற்றி எண்களின் கூட்டல் கணக்கினைக் காட்டியே வெற்றிக் கணக்காக Score என்ற சொல் பிறந்திருக்கிறது.

இந்த Score என்ற சொல்லுக்கு ஸ்கோரு (Scoru) என்று கூறப்படும் ஆங்கிலச் சொல்லே ஆரம்ப