பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


இந்த Sport எனும் ஆங்கிலச் சொல்லானது, இலத்தின் சொல்லான Desport என்பதிலிருந்து உருவாகி வந்திருக்கிறது. Des எனும் சொல்லுக்கு Away என்பது பொருள் அதாவது நீங்கி, துர, வெளியே, விலகி என்பது பொருளாகும். Porto எனும் சொல்லுக்கு Carry என்பது அர்த்தமாகும். அதாவது கொண்டுபோ, தாங்கு, சும என்பது பொருளாகும். இவ்வாறு இரண்டு சொற்களாகப் பிரிந்து கூறுகின்ற பொருள்களின் உள் அர்த்தமாவது, ஒருவருடைய செயல் அல்லது பணி அல்லது வேலையிலிருந்து நீங்கி வெளியே செல்வது என்பதே ஆகும்.

செய்துகொண்டிருக்கும் ஒரு வேலையிலிருந்து விலகி, வேறு ஒரு விருப்பமுள்ள பணியில் ஈடுபடுவது என்பதாக பொருள் கொள்ளப்பட்டது.

அந்த Desporto எனும் சொல்லே மேலும் சுருங்கி Disport என்று வந்தது-

அதாவது, ஒரு வேலையில் ஈடுபட்டு தனக்குள்ளே மகிழ்ச்சியை உண்டு பண்ணிக் கொள்வது என்பது.

அவ்வாறு ஈடுபடும் செயல் விளையாட்டாக இருக்கலாம். பொழுது போக்காக இருக்கலாம். விளையாட்டுப் போட்டிகளாகவும் இருக்கலாம்.

அல்லது தனி மனிதன் திறமையைக்காட்டும் சாகசச் செயலாகக்கூட இருக்கலாம்.

ஆனால், அது ஒருவருக்கு உல்லாசத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டுவதாக அமைந்திருப்பதையே Sport என்று கூறினர்.