பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33




14. MARCH


நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும், உயர்ந்த தோற்றமும் உற்சாகமான நடையும் கொண்டு கைவீசி நடக்கின்ற நடையை, நாம் அணிநடை (Marching) என்கிறோம்

அணிநடை என்று நாம் அழைப்பதற்குக் காரணம், ஒன்று பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அழகான நடை என்பதாகவும், இராணுவ அணியினர் முன்னேறிச் சென்றிட நடந்து செல்லும் இயல்புக்கு உதவும் தன்மையால் அணி நடை என்பதாகவும் உள்ள பொருளிலேதான் இவ்வாறு அழைக்கிறோம்.

அணிநடையை ஆங்கிலத்தில் March என்பதாகக் கூறப்படுகிறது.

இந்த March என்ற ஆங்கிலச் சொல்லானது பிரெஞ்சுச் சொல்லான Marcher எனும் சொல்லிலிருந்து பிறந்து வந்ததாகும்.

மார்ச்சர் என்ற சொல்லுக்கு To walk என்பது பொருளாகும்.

ஆரம்ப காலத்தில், மார்ச்சர் என்ற சொல்லானது அடியிட்டு நடப்பதற்கும், அடிவைக்கும் ஒசைக்கும், காலால் மிதிப்பதற்கும், நடக்கும் தோரணைக்கும் உரிய பொருளான Tread எனும் பொருளிலும், நடந்து செல்லும் பொருள்தருகின்ற Tramp எனும் சொல்லிலும் வழங்கி வந்தது.