பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


கால மாற்றத்தில் வேகமாகக் கைகளை வீசி, செம்மாந்து நடக்கின்ற ஒன்றைக் குறிப்பதாகவே அமைந்து விட்டிருக்கிறது.

நிமிர்ந்த உடல் தோற்றத்திற்கு இருகை வீசி, அடியிட்டு நடக்கும் அணிநடை உதவுவதுடன், ஏற்றமான வாழ்க்கைக்கும் உடல் நலத்திற்கும் கட்டுப்பாட்டிற்குத் துணை தருவதாகவும் பயன்படுகிறது.



15. TOURNAMENT

தொடர் போட்டி ஆட்டம் என்று நாம் தமிழிலே இதைக் கூறுகிறோம்.

ஒரிரு முறை ஆட்டங்களில் (Set) ஆட்டம் முடிந்து போனால் அதை போட்டி ஆட்டம் என்றும், பல குழுக்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் இருந்து, இறுதி வெற்றி காணும் வரை தொடர்ந்து போட்டியிட்டு ஆடுவதையே தொடர் போட்டி ஆட்டம் என்றும் கூறுகிறோம்.

இந்த Tournament என்ற சொல்லானது, பழைய பிரெஞ்சுச் சொல்லான Tournal என்ற வார்த்தையி லிருந்தும் பிறகு Tournoment என்னும் வார்த்தையிலிருந்தும் மாறி மருவி உருவம் பெற்று வந்திருக்கிறது.

இந்த இரண்டு சொல்லுக்கும். திரும்ப (To Turn) என்பது பொருளாகும், அல்லது மாற்று என்பதும் மற்றொரு பொருளாகும்.